தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில்தமிழில் குழந்தைகள் பெயர் பதாகை திறப்பு

Update: 2023-04-14 19:00 GMT

மொரப்பூர்:

கடத்தூர் பேரூராட்சியில் குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்கள் தாங்கிய பதாகை திறப்பு விழா நடைபெற்றது. தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரசாங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்கள் தாங்கிய பதாகையை திறந்து வைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதன் அவசியம் குறித்து பேசினார். மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் கண்ணப்பன், முத்துசாமி, குப்தா ஆகியோரிடம் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடைகள் தோறும் துண்டறிக்கை வழங்கப்பட்டது.

இதில் மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் இமயவர்மன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கோவிந்தசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பாஷா, அன்புமணியின் தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர் செல்வம், கடத்தூர் பேரூர் செயலாளர் கந்தன், தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன், நிர்வாகிகள் ஜெகதீசன், இன்பன், வேல்முருகன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்