பிரதமர் மோடி நாளை வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் அண்ணா ஆர்ச் வழியே திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான சாலையில் கூடுதல் சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தால் சென்ட்ரல் முதல் விவேகானந்தர் இல்லம் வரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது.