பிரதமர் மோடி தாயார் மறைவு:இந்து முன்னணி இரங்கல்

பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு இந்து முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது.;

Update: 2022-12-30 18:45 GMT

திருச்செந்தூர்:

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இறந்தார் என்று செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.. அவரது ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்னாரை இழந்து வாடும் பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மாநில இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்