ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்...!

முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

Update: 2023-04-09 05:17 GMT
நீலகிரி
Live Updates
2023-04-09 06:34 GMT

முதுமலை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி மைசூரு புறப்பட்டார். தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து சாலை மார்க்கமாக காரில் மசனக்குடி சென்ற பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூரு புறப்பட்டு சென்றார்.

2023-04-09 06:26 GMT

தெப்பக்காடு முகாமில் இருந்து மீண்டும் மைசூரு செல்லும் வழியில் மசனக்குடியில் பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார். மசனக்குடியில் காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி சாலையின் இரு புறமும் இருந்த பொதுமக்கள், பாஜகவினரை பார்த்து கையசைத்தார்.

2023-04-09 05:57 GMT

ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

2023-04-09 05:37 GMT

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பிரதமர் மோடி கரும்பு உணவு அளித்தார்.

2023-04-09 05:18 GMT

பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தில் இருந்து சாலை மார்கமாக காரில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வந்தடைந்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.

2023-04-09 05:17 GMT

பிரதமர் மோடி நேற்று சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இரவு கர்நாடகாவின் மைசூரு சென்றார். இரவு மைசூருவில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்