பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-10-25 23:31 IST

வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உமா (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 18-ந் தேதி மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த மாணவியிடம், சரியாக படிப்பதில்லை என பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்த பூச்சி மருந்த குடித்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார்.

இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்