தேன்கனிக்கோட்டையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை

தேன்கனிக்கோட்டையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-28 17:16 GMT

தேன்கனிக்கோட்டை:

பிளஸ்-2 மாணவி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுகுந்தன். இவருடைய மகள் காயத்திரி (வயது 17). மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

தேன்கனிக்கோட்டை அருகே நெல்லுகுந்தி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். சரியாக படிக்காததால் அவருடைய பெற்றோர் காயத்திரியை கண்டித்தனர்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்தார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி காயத்திரி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்