பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு - தேர்வுத்துறை

பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும்என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.;

Update: 2023-06-13 12:01 GMT

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும்என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்