பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

Update: 2023-04-03 19:00 GMT

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 90-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த பாடங்களுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக மாணவ-மாணவிகள் கடுமையாக படித்து தேர்வு எழுதி வந்தனர். உயர்கல்வி பயில்வதற்கு இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்தே அமையும். அதனால் ஒவ்வொருவரும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தேர்வை எழுதினர்.

மாணவ-மாணவிகள் உற்சாகம்

இந்த நிலையில் நேற்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை துள்ளிக்குதித்து வெளிப்படுத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை தூவியும், பேனா மையை தெளித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இந்தநிலையில் கடந்த மார்ச் 14-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) நிறைவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்