நாகை மாவட்டத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர்.;

Update: 2023-04-03 19:00 GMT

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாகை மாவட்டத்தில் 34 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதுவதற்காக 3 ஆயிரத்து 891 மாணவர்களும், 4,317 மாணவிகளும் என மொத்தம் 8,207 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தொடக்க நாள் முதலே மாணவ- மாணவிகள் ஆர்வமாக வந்து தேர்வு எழுதினர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடந்த தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.

பிரியாவிடை பெற்ற மாணவர்கள்

நாகை பகுதியில் உள்ள பள்ளிகளில் நேற்று கடைசி தேர்வு எழுதி முடித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் தேர்வு அறைகளில் இருந்து வெளியே வந்த ்பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தங்களுக்கு பாடங்கள் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக்கொண்டனர். மேலும் ஒருவர் ஒருவர் மீது மை தெளித்து தேர்வு முடிந்ததற்கான மகிழ்ச்சியை ெவளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்