பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கியது
பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கியது. பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகளுக்காக கடந்த 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வகுப்புகள் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியை தமிழரசி வழங்கினார். அப்போது உதவி தலைமை ஆசிரியர்கள் முத்துக்கருப்பன், சாந்தி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.