பிளஸ்-1 மாணவியை மிரட்டி பலாத்காரம்

பிளஸ்-1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-10-13 18:45 GMT


பிளஸ்-1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-1 மாணவி

சேலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கோவையை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று பேச முயன்றார்.

மேலும் அவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த மாணவி, மகேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியை சந்தித்த மகேந்திரன், நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்றுக்கூறி தான் தங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று உள்ளார்.

மிரட்டி பலாத்காரம்

அங்கு யாரும் இல்லாத நிலையில், மகேந்திரன், அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டலும் விடுத்து உள்ளார். இதையடுத்து அந்த மாணவி,தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோவை மாநகர கிழக்குப்பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில், மகேந்திரன் அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது உறுதியானது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் மகேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போக்சோவில் கைது

இதை அறிந்த மகேந்திரன் தலைமறைவானார். இதை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, போத்தனூர் பகுதியில் பதுங்கி இருந்த மகேந்திரனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்