பிளஸ்-1 மாணவர் விபத்தில் பலி

புதுச்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் விபத்தில் பலியானார்.

Update: 2023-03-15 18:38 GMT

பிளஸ்-1 மாணவர்

புதுச்சத்திரம் அடுத்த களங்காணி அருகே உள்ள சின்ன களங்காணியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் இந்து சமய அறநிலையத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர். மூத்த மகன் பெரியசாமி (வயது 16). இவர் களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

பெரியசாமி அவரது பள்ளி நண்பர்களான கரடிபட்டியை சேர்ந்த தனுஷ் (16), தாரமங்கலம் அடுத்த கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த சரண்ராஜ் (16) ஆகிய 3 பேர் ஸ்கூட்டரில் சர்க்கார் உடுப்பத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சரண்ராஜ் ஓட்டிச் சென்றார்.

சாவு

இந்தநிலையில் முத்துடையார் பாளையம் அருந்ததியர் காலனி அருகே ஸ்கூட்டர் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த கல்லில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதில் மாணவர் பெரியசாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் மாணவர்கள் தனுஷ், சரண்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்