குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

Update: 2023-04-07 18:45 GMT

மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.

பிளஸ்-1 மாணவர்

மயிலாடுதுறை அருகே மாப்படுகை அய்யாவாடி குளத்து மெயின்ரோட்டை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தீபக்ராஜ்(வயது 16). மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்த இவர் தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் தீபக்ராஜ் தனது நண்பர்களுடன் சிவன் கோவில் எதிரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆழத்தில் இறங்கிய தீபக்ராஜ் தண்ணீரில் மூழ்கினார். காணாமல் போன தீபக்ராஜை அவரது நண்பர்கள் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்ைல.

தண்ணீரில் மூழ்கி சாவு

தகவல் அறிந்த தீபக்ராஜின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது தண்ணீரில் மூழ்கிய தீபக்ராஜை மீட்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்