பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை

மேல்மலையனூர் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை காதலிக்க வாலிபர் வற்புறுத்தியதால் விரக்தி;

Update: 2023-04-23 18:45 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே வேட்டைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகள் வளர்மதி(வயது 16). மேல்மலையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த இவரை வேட்டைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார்(21) தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு மறுத்த வளர்மதியை சந்தோஷ்குமார் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை, அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வளர்மதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சந்தோஷ்குமார் மீது வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்