பிளஸ்-1 மாணவி தற்கொலை

சிங்கம்புணரி அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-04-08 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வகுதெழுவன்பட்டியை சேர்ந்தவர் வள்ளிராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா(வயது 16). இவர் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

மேலும் சண்முகப்பிரியா சிங்கம்புணரி எஸ்.எஸ்.நகரில் உள்ள தனது பெரியம்மா செல்வியின் மகளான ரேணுகா வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கண்ணமங்கலபட்டி திருவிழாவிற்கு சென்று விட்டு அவர் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் வீட்டில் சண்முகப்பிரியா, அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது சரியாக படிக்கவில்லை என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்ெகாலை

இந்நிலையில் திடீரென்று வீட்டிற்குள் சென்ற சண்முகப்பிரியா கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டுக்கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சண்முகப்பிரியா தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சண்முகப்பிரியா வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்