பிளஸ்-1 மாணவியை காட்டுக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம்

திட்டக்குடியில் கருவேல மரக்காட்டுக்குள் பிளஸ்-1 மாணவியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்த விவசாயியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Update: 2023-04-13 18:45 GMT

திட்டக்குடி, 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பெண்ணாடத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த மாணவியை, கூடலூர் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் செல்வம் (வயது 54) என்பவர் வலுக்கட்டாயமாக, அருகே உள்ள கருவேல மரக்காட்டுக்குள் தூக்கிச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதன்பின்னர் மாணவி, அழுதுக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். அவரிடம் பெற்றோர் என்ன நடந்தது என்று கேட்ட போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து மாணவியின் தாய் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்