கடலூாில் மின்சாரம் தாக்கி பிளம்பர் சாவு

கடலூரில் மின்சாரம் தாக்கியதில் பிளம்பர் உயிாிழந்தாா்.

Update: 2023-02-16 18:45 GMT

கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் புஷ்பநாதன் மகன் பீட்டர் (வயது 45). பிளம்பர். இவருக்கு பீனா தாமஸ் என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பீனா தாமஸ் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பீட்டர் பிளம்பர் வேலைக்காக திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். பின்னர் அந்த வீட்டின் 2-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது எதிர்பாராதவிதமாக பீட்டரின் முதுகு உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பீட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்