பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி

திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

Update: 2023-07-10 18:34 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மதுரை ஓம்நந்தியம் பெருமான் உழவார பணிக்குழு சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

இதில் தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், கோவில் குருக்கள் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்