கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

Update: 2023-07-15 19:06 GMT

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிஅரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சென்னையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். கோவில் பிரகாரங்களில் படிந்திருக்கும் தூசிகள், எண்ணை கரைகள், விபூதி கரைகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் தொட்டு துணிகளால் துடைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்