பள்ளிகளில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி -கல்வித்துறை உத்தரவு
குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சென்னை,
குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி எடுக்க சமூக நலத்துறை அறிவுறுத்தியது. அதனை பின்பற்றும் விதமாக அதற்கான உறுதிமொழிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (திங்கட்கிழமை) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.