குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி டீன் செல்வி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம் முன்னிலை வகித்தார். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கீதா வரவேற்றார். இதில் மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.