ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உள்ளாட்சி பிரதநிதிகள், அரசு அருவலர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.