போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-12 17:19 GMT

காரைக்குடி,

அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை வாசித்து பேசினாvர். இந்நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர மன்ற தலைவர் முத்துத்துரை, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்பு குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், கருப்பசாமி, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சங்கரநாராயணன், குணசேகரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர், 

Tags:    

மேலும் செய்திகள்