பிளாஸ்டிக்- கழிவு பொருள் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

புத்தூரில் பிளாஸ்டிக்- கழிவு பொருள் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-11-27 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருள் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். செம்பை வட்டார கல்வி அலுவலர் பூவராகவன், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமாமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டது. சிறந்த கண்காட்சி வைத்து காட்சிப்படுத்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசுகள்- சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்