பேபி வாய்க்காலில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகள்அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பேபி வாய்க்காலில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

Update: 2023-08-12 21:49 GMT

காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக கழிவுகள் கலப்பதை தடுக்கும் வகையில் பேபி வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. இந்த பேபி வாய்க்காலில் தற்போது அதிக அளவில் மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பேபி வாய்க்காலில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து பேபி வாய்க்காலையொட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் கூறும்போது, 'பேபி வாய்க்காலில் தற்போது அதிக அளவில் சாய, சலவை பட்டறைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி உள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதுட்டுமின்றி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே பேபி வாய்க்காலில் அடிப்பகுதியில் படிந்துள்ள மண் மற்றும் மேல் பகுதியில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்