2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

2½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-08 19:15 GMT

தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் தடையையும் மீறி நாகை மாவட்டத்தில் பரவலாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்து வந்தது. இது குறித்து கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி, நாகை நகராட்சி ஆணையர் அறிவுரைப்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கார்த்திகேயன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர் ஆகியோர் தலைமையில் களப்பணி உதவியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் நாகை, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 2½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.53 ஆயித்து 900 அபராதம் விதித்து, இதற்கான தொகையை நகராட்சி கருவூலத்தில் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்