கடைகளில் வைத்திருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மாரண்டஅள்ளி பகுதியில் கடைகளில் வைத்திருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி, இளநிலை உதவியாளர் சபரி மற்றும் தூய்மை பணியாளர்கள், வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். மேலும் ஒரு பழக்கடையில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 250 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர். சில கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள், மளிகை பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என செயல் அலுவலர் சித்திரைக்கனி தெரிவித்தார்.