தூய்மை பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கம்

தூய்மை பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-12-30 19:13 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் காட்டுப்புத்தூர் பேரூராட்சியை 90 நாட்களுக்குள் முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தினை காடுவெட்டி எம்.எல்.ஏ. ந.தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்த ரங்கிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினால் மனித குலத்திற்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய்கள் மற்றும் மண்வளம் பாதிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் துணிப்பைகளையும், உலோக பாத்திரங்களையும் பயன்படுத்திவிடவும், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தாள், தெர்்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் மெழுகு பூசப்பட்ட கப்புகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை தவிர்த்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்