பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2023-03-31 19:48 GMT

கும்பகோணம் அரசு ஆண்கள் தன்னாட்சி கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை தாங்கினார். இதில் மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பகோணம் பாலக்கரை பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்கரபாணி கோவில் தேரடி பகுதியில் முடிவடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்தும், மஞ்சள் பையை உபயோகிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்