பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோபால சமுத்திரம் கிராம உதயம் இணைந்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், 500 மரக்கன்றுகள் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் சேகர் வரவேற்றார். பொறுப்பாளர்கள் முருகன், ஆரோக்கியமிக்கேல் ஜீவா, ஜெபமணி ஆகியோர் பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் மரக்கன்றுகள் அவசியம் குறித்து பேசினார்கள். தனி அலுவலர் ரேவதி குமாரி நன்றி கூறினார். தென்காசி நகர்ப்புற பகுதி முழுவதும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆட்டோ பிரசாரம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு துணிப்பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.