பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சேரன்மாதேவியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-06-20 19:25 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. சேரன்மாதேவி பஸ் நிலையம் முதல் காந்தி பூங்கா வரை நடந்த பேரணியை உதவி கலெக்டர் ரிஷாப் தொடங்கி வைத்தார். ஆட்டோ மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல், மஞ்சள் துணிப்பைகள் வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உதவி கலெக்டர் ரிஷாப் தலைமை தாங்கி மரக்கன்றுகளை வழங்கினார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர் சசிகலா, சேகர், ஆறுமுகத்தாய் ஆகியோர் மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கி கூறினர். தனி அலுவலர் ரேவதி குமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்