பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-06-25 15:24 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் ராம்ராஜ் தொடங்கி வைத்தார். சுகாதார மேற் பார்வையாளர் அசோகன், துணைத்தலைவர் ஆனந்தமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கார்த்திக், திருப்பதி, செந்தில்குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள், டெங்கு களப்பணியாளர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பிளாஸ்டி பொருட்களை ஒழிப்பது குறித்தும், மஞ்சள் பையை அனைத்து மக்களும் பயன் படுத்த வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்