பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

வேதாரண்யத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார்.வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பெண்களுக்கான மாரத்தான் போட்டியையும், ஆண்களுக்கான போட்டியை துணை போலீஸ்சூப்பிரண்டு முருகவேல் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1500-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், டாக்டர்கள் சுந்தரராஜன், ராஜசேகர். இன்ஸ்பெக்டர்கள், குணசேகரன்,|கன்னிகா, ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்