பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கி பேசினார்.
பின்னர் கூட்டத்தில், பிளாஸ்டிக் உபயோகிப்பதன் தீமைகள் குறித்தும், அதனை பொதுமக்கள் தெரிந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. அதேபோல் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து விளக்கப்படம் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.