பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது

பனப்பாக்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என தாசில்தார் அறிவுறுத்தினார்.

Update: 2023-07-01 17:48 GMT

பனப்பாக்கம் பேரூராட்சியில் வியாபாரிகள், பொதுமக்களுக்கான ஆலோசனை கூட்டம் பேரூராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி தாசில்தார் பாலசந்தர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் கடைகளை நடத்தவேண்டும். கடைக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்த ஆலோசனை வழங்கவேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது. குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை யாராவது விற்பனை செய்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வியாபாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்