பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்
மோகனூரில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மோகனூர்
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, சர்க்கரை ஆலை வண்டிகேட், மணப்பள்ளி, வழியாக பாலப்பட்டி வரை சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகம் வரை மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், துணிப்பையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பட்டன. நிகழ்ச்சியில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன் (ராசிபாளையம்), நந்தகுமார் (செங்கப்பள்ளி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பரமேஸ்வரன், அன்பழகன் நாகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து செய்திருந்தார்.