பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருபுவனம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊா்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு திருபுவனம் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் டி. பங்கையர்செல்வி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு ஊர்வலம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு பேரூராட்சி அலுவலகம் வழியாக சென்றடைந்தது. ஊர்வலத்தில் துணைத்தலைவர் ரவிசங்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.