பராமரிப்பு இன்றி கருகிய செடிகள்

சோளிங்கரில் நடவு செய்யப்பட்ட செடிகள் பராமரிப்பு இன்றி கருகியது.

Update: 2022-09-14 17:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் தொண்மையானது என்பதால் இந்த நகரை பசுமை நகரமாக மாற்ற பில்லாஞ்சி சபாபதி நகர், அண்ணாநகர், அப்பங்காரகுளம், 17 வார்டு பகுதிகளில் பூங்காக்கள் அமைத்து அதில் வேம்பு, புங்கை, காட்டோ, பாதம், இலுப்பை, மூலிகைச் செடிகள் உள்ளிட்ட பத்து வகையான ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சியாக இருக்கும் போது செயல் அலுவலர் செண்பகராஜான் தலைமையில் நடவு செய்து பராமரிப்பு செய்து வந்தனர். ஆனால் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் பராமரிப்பு செய்யாமலும், நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்யாமலும் விட்டனர். இதனால் அனைத்து செடிகளும் தண்ணீர் இன்றி காய்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்