குடிநீர் ெதாட்டியை சுற்றி வளர்ந்த செடிகள்
குடிநீர் ெதாட்டியை சுற்றி வளர்ந்த செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகே சாலை ஓரம் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி உள்ளது. அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை ெதாட்டியைச் சுற்றிலும் செடிகள், மரக்கன்றுகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க இடையூறாக உள்ளது. ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின் விசை ெதாட்டியைச் சுற்றி உள்ள மரக்கன்றுகுள், செடி, கொடிகளை ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.