மரக்கன்று நடும் விழா

சேரன்குளம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-06-29 17:49 GMT

வடுவூர்;

மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடதிட்டமிட்டு நேற்று மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் முதல் மரக்கன்றை நட்டு வைத்தார். பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தன்னார்வ அமைப்புகளான எக்ஸ்னோரா, கிரீன் நீடா ஆகிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்