கடற்கரை கிராமங்களில் பனை விதைகள் நடும் பணி

பழையாறு கடற்கரை கிராமங்களில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.;

Update:2023-10-03 00:15 IST

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் பண விதைகள் நடும் பணி நடந்தது. கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு பனை விதையை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார். இதில் கொடியம்பாளையம் முதல் திருமுல்லைவாசல் வரை உள்ள கடலோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டன. இதில் பேராசிரியர் சசிகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்