மூலிகை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

துளசேந்திரபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மூலிகை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-11-24 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி சார்பில் பள்ளி வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி உறுப்பினர் சுஜாதா முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் கலந்துகொண்டு மூலிகை மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்