வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதை விதைக்கும் பணி
வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதை விதைக்கும் பணி நடைபெற்றது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நேற்று நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
இதில் விளாத்திகுளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வமணி, சுமதிஇம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.