உயர்கல்வியை தொடர்வதற்கு திட்டமிடல் கூட்டம்

உயர்கல்வியை தொடர்வதற்கு திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-16 18:16 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-23-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடத்துவதற்கான திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கரூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்து உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத 249 மாணவர்களும், உயர்கல்விக்கு விண்ணப்பித்து சேர்க்கைக்காக காத்திருக்கும் 1,739 மாணவர்களும் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடத்தி, இந்த மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர வழிவகை செய்திட இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் மாணவர்களின் பெயர், இருப்பிடம், பெற்றோர் விவரம், அலைபேசி எண், உயர்கல்வி பயில உள்ள இடர்பாடுகள் உள்ளிட்ட விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு இம்முகாம் மூலம் உயர்கல்வி பயில உரிய நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்