அதிமுக பொதுக்குழுவில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம் - ஆர்.எப்.ஐ.டி மூலம் வருகைப் பதிவு

ஆர்.எப்.ஐ.டி. எனப்படும் அடையாள அட்டையின் மூலம் அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2022-07-06 04:49 GMT

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆர்.எப்.ஐ.டி. எனப்படும் அடையாள அட்டையின் மூலம் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.எப்.ஐ.டி. எனப்படுவது ரேடியோ அலைவரிசை மூலம் கணிணியில் வருகைப்பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். பெரும்பாலும் தொழில் நிறுவனங்களில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்