விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள்

சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2023-09-05 20:36 GMT


சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான அரசு வழிகாட்டுதலின் படியும், மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விநாயகர் சிலை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்க்காணும் இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

விருதுநகர்

விருதுநகரை சுற்றியுள்ள இடங்களில் இருந்து வரும் சிலைகள் கல் கிடங்கில், ஆவுடையாபுரத்தில் இருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தாத கிணற்றிலும், சிவகாசி நகர்பகுதியில் இருந்து வரும் சிலைகள் தெய்வானை நகரில் உள்ள உபயோகப்படுத்தாத கிணற்றிலும் கரைக்கலாம்.

எம். புதுப்பட்டி மாரநேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரநேரி கண்மாய், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து வரும் சிலைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம், பந்தல்குடி சுற்றியுள்ள இடங்களில் வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாய், ராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்ப்புறம் உள்ள வடுக ஊருணியிலும் கரைக்க வேண்டும்.

அருப்புக்கோட்டை

அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்தில் இருந்து வரும் சிலைகள் அப்பகுதியில் உள்ள உபயோகப்படுத்தப்படாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியிலும், கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயிலும், வத்திராயிருப்பு சிலைகள், கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரிய குளம் கண்மாய் பகுதியிலும் கரைக்க வேண்டும்.

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி ரோட்டில் உள்ள பெரிய கண்மாய், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி கண்மாய் பகுதியிலும் கரைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதுகாத்து கொண்டாடும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் அலுவலகங்களை அணுகலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்