நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-09-15 22:16 GMT

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அஸ்தம்பட்டி, மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர்நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டாபெரிய புதூர், நகரமலை அடிவாரம், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, வினாயகம்பட்டி, ஏற்காடு.

இதே போல உடையாப்பட்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஸ்ரீநகரம் மின் பாதையில் அவசர கால பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீநகரம், ஸ்ரீசாய்கிருஷ்ணாநகர், குட்டிக்கரடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்