நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கன்னங்குறிச்சி
சேலம் அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்துக்குட்பட்ட கோரிமேடு மின்பாதையில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி, சின்ன கொல்லப்பட்டி, ராமநாதபுரம், மோட்டாங்குறிச்சி, எம்.எல்.நகர், பெரியகொல்லப்பட்டி, ஜட்ஜ் ரோடு, கலெக்டர் பங்களா, அரசு பெண்கள் கலைக்கல்லூரி, சாய்பாபா காலனி, மாடர்ன் தியேட்டர் மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று சேலம் கிழக்கு மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், உடையாப்பட்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட மலையருவி மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அதிகாரிப்பட்டி, வீராணம், பெருமானூர், கோராத்துப்பட்டி, வேடப்பட்டி, கத்தாலைபாடி, வளையக்காரனூர், வீமனூர், அல்லிக்குட்டை, நரசிம்மன் கோவில் பகுதி, தாதம்பட்டி, இளந்தோப்பு, வ.உ.சி நகர், நாகர் படையாச்சி காடு, எஸ்.கே. டவுன் சிப் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவனேரி
வேம்படிதாளம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சித்தர்கோவில் மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நடுவனேரி, ஆலங்காட்டானூர், ராமாபுரம், ரெட்டிப்பட்டி, புதுப்பாளையம், மண்காடு, ரெட்டிமாணிக்கனூர், உழப்பன் கோட்டை, கல்பாரப்பட்டி, ஏழுமாத்தனூர், நல்லணம்பட்டி, கொசவம்பட்டி, காடையாம்பட்டி, பரமகவுண்டனூர், வெள்ளைபிள்ளையார் கோவில், சாத்தம்பாளையம், சித்தனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரிசிபாளையம்
சேலம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட டவுன்-2 மற்றும் பூலாவரி மின் பாதையில் நாளை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லீபஜார், ஆர்.சத்திரம், ரத்தினசாமிபுரம், தம்மண்ண செட்டி ரோடு, நாராயணசாமி புரம், அரிசிபாளையம், ஆர்.டி.பால், சாமிநாதபுரம் மெயின்ரோடு, அங்கம்மாள் காலனி, சின்னேரிவயல், பூலாவரி, ரங்காபுரம், அமானி கொண்டலாம்பட்டி, சந்தைபேட்டை, நெய்க்காரப்பட்டி, என்.மேட்டூர், சின்ன கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் புத்தூர் மற்றும் பெருமாம்பட்டி மின் பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புத்தூர் அக்ரஹாரம், சந்தனகாரன் காடு, பக்கிரிகாடு, மலங்காடு, கணவாய்க்காடு, பெருமாம்பட்டி, கொத்தனூர், தும்பாதுளிப்பட்டி, பூசநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி கிழக்கு வட்டம், பட்டக்காரன் தெரு, குடுமியான் தெரு, முறம்பு காடு, சந்தனகரடு, கஞ்சி மாரியம்மன் கோவில், பொத்தனூர் மற்றும் ஆண்டிப்பட்டி மேல்காடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கருப்பூர்
கருப்பூர் துணை மின் நிலையத்தில் சூரமங்கலம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மின்பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம், ரெட்டிப்பட்டி, தர்மன்நகர், ராசிநகர், ஜங்சன், சுப்பிரமணிய நகர், பாகல்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, புளியம்பட்டி, பெருமாள்கோவில் மற்றும் மாங்குப்பை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.