நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
சீர்காழி:
நாளை மின்நிறுத்தம்
மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், விஜயபாரதி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எடமணல், அரசூர், ஆச்சாள்புரம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
இதை முன்னிட்டு அந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், திருக்கருகாவூர், குலத்தினங்கநல்லூர், விநாயககுடி, கீராநல்லூர், மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், கோபால சமுத்திரம், சீயாளம், குமிலங்காடு, துளசேந்திரபுரம், சரஸ்வதிவிளாகம், காப்பிய குடி, ஆர்ப்பாக்கம், விளந்திட சமுத்திரம், ஆண்டி கோட்டம், சேந்தங்குடி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருவெண்காடு
இதேபோல் ஆத்துக்குடி, தர்மதானபுரம், கதிராமங்கலம், கொண்டத்தூர், திருநன்றியூர், திருவெண்காடு நகரம், பெருந்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.