மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

Update: 2022-11-21 19:19 GMT
மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


மதுரை பசுமலை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட நிலையூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மற்றும் மரக்கிளைகள் வெட்டும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவிநகர், கிருஷ்ணன்நகர், சபரிநகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார்நகர், மல்லிகைகாடன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள்நகர், காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் அவனியாபுரம் துணைமின் நிலைய எம்.எம்.சி. காலனி உயர் அழுத்த மின்பாதையில் புதிய மின் கடத்திகள் மாற்றும் பணிகள் இன்று நடக்கிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் கற்பக நகர் முழுவதும், வில்லாபுரம் குடிசை மாற்று வீடுகள் குடியிருப்பு பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை மதுரை அரசரடி மேற்கு பெருநகர் மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்